தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னையில்…

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னையில்…

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னையில் காலை நிலவரப்படி, 24 காரட் சுத்தத் தங்கம் கிராமுக்கு 22 ரூபாய் விலை உயர்ந்து 2 ஆயிரத்து 706 ரூபாயாக உள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கமும் ஒரு கிராம் 20 ரூபாய் விலை அதிகரித்து 2 ஆயிரத்து 530 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் விலை ஏற்றம் கண்டு 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சில்லரை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி 80 காசு விலை அதிகரித்து 39 ரூபாய் 50 காசுக்கும், கட்டி வெள்ளி கிலோவிற்கு 740 ரூபாய் விலை உயர்ந்து 36 ஆயிரத்து 905 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

மூலக்கதை